இறை நாமத்தை திரும்ப திரும்ப சொன்னால் சக்தி வரும்

இறை நாமத்தை திரும்ப திரும்ப சொன்னால் சக்தி வரும்
X

இலக்கிய மேகம் சீனிவாசன்:

நாம் நம் அம்மாவிடம் பேசுவது போல கடவுளிடம் பேச வேண்டும்.

இறை நாமத்தை நாம் திரும்பத் திரும்ப உச்சரிப்பது மூலம், நமக்கு அளப்பரிய சக்தி கிடைக்கும் என ஆன்மிக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், எஸ்.எஸ். காலனியில் உள்ள எஸ்.எம்.கே., மண்டபத்தில் அனுஷ உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் தினமலர் ஆன்மிகமலர் கட்டுரையாளர் 'இலக்கிய மேகம்' சீனிவாசன், 'அருள் தரும் அந்தாதி' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

அபிராமி அந்தாதி, பன்னிரு திருமுறை போன்றவை ஆன்மிகத்தின் பக்கிஷங்கள். மனதளவில் நமக்கு நாமே பேசிக் கொண்டிருப்பதால் கவலைதான் வரும். இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்றார் கண்ணதாசன்.நமக்கு உலகமே குடும்பம். நம் கவலைகளை அடுத்தவனிடம் சொல்வதற்கு வெட்கப்படுகிறோம். நம் கவலைகளை கடவுளிடம் சொல்லலாம். இறை நாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு சக்தி பிறக்கும். குருநாதரை தரிசிப்பது சிறப்பு தரும். குருநாதர் நம் பிறவிப் பயனை போக்குவார்.

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இறைவா! இன்றைய பொழுது நன்றாக ஆக்கு.!' என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். நாம் நம் அம்மாவிடம் பேசுவது போல, கடவுளிடம் பேச வேண்டும். வாழ்க வளமுடன், திருச்சிற்றம்பலம், முருகா துணை, சிவாய நம என எப்போதும் இறைவன் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அபிராமி பட்டர் நின்றும் நடந்தும் உன் நாமத்தை சொல்ல வேண்டும் என்றார். நம் இல்லத்தில் பாசிட்டிவ் அதிர்வலைகள் எப்பொழுதும் இருக்க வேண்டும். இன்றைய தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் நெகட்டிவ் அதிர்வலைகள் தான் வரும்இவ்வாறு 'இலக்கிய மேகம்' சீனிவாசன் பேசினார்.

முன்னதாக அனுஷ உற்சவத்தை முன்னிட்டு காமாட்சி அம்பாள் மற்றும் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார் .


Tags

Next Story