மதுரை, திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா

மதுரை, திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா
X

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,  கோபுர முகப்புத் தோற்றம்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா, மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

மதுரை திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா, சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் ஏப்ரல்.8-ம் தேதி நடைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழா வருகிற மார்ச் 26- ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 7ம் தேதி பட்டாபிஷேகம், ஏப்ரல் எட்டாம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்றும், ஏப்ரல் ஒன்பதாம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் துணை ஆணையாளர் சுரேஷ் மற்றும் ஆலய நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, திருப்பரங்குன்றம் போலீஸார் கவனித்து வருகின்றனர்.

Next Story