மதுரை அருகே காற்றில் பறக்கும் அரசு பேருந்தின் மேற்கூரை : அச்சத்தில் பொதுமக்கள்

ஆடி காற்றே ஆரம்பிக்கவில்லை அதற்குள் பறக்க முயற்சிக்கும் அரசு பேருந்தின் மேல் கூரை:
ஆடி காற்றே ஆரம்பிக்கவில்லை அதற்குள் பறக்க ஆரம்பிக்கும் அரசு பேருந்தில் மேல் கூரை.பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்குமா? போக்குவரத்து கழக நிர்வாகம்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி அரசு நகரப் பேரூந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, திருப்பரங்குன்றத்தை அடுத்த மூலக்கரை அருகே வரும் பொழுது, பேருந்தின் மேற்புறம் ஒட்டப்பட்டுள்ள எஃப் ஆர் பி என, அழைக்கப்படும் தார்ப்பாயானது பிரிந்து பயணிகள் அமர்ந்திருக்கும் ஜன்னல் ஓரம் வந்து விழுந்தது.
இதனால் அதிர்ந்து போன பயணிகள் பேருந்து நிறுத்த சொல்லி கூச்சலிட்டனர். உடனடியாக ,ஓரமாக பேருந்து நிறுத்திய ஓட்டுனர் கீழே இறங்கி பார்த்தபொழுது, மேலே ஒட்டப்பட்டு இருந்த தார்ப்பாய் காற்றின் வேகம் தாங்க முடியாமல் பிரிந்து தொங்கியது.தெரிய வந்தது பேருந்தை ஓரமாக நிறுத்தி அதில் இருந்த பயணிகளை மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைத்தனர். ஆடி காற்றே ஆரம்பிக்காத நிலையில், ஆரம்பத்திலேயே சிறு காற்றுக்கே பேருந்து மீது ஒட்டப்பட்டுள்ள தார்ப்பாயானது பிரிந்து விழுகிறது .
மேலே உள்ள இதே தார்ப்பாய் ஆனது பேருந்து ஓட்டுநர் கண்ணாடி விழுந்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். இது போன்று இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க, அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu