திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத்திருவிழாவுக்காக கொடியேற்றம் கோயில் வளாக கம்பத்தடி மண்டபத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடங்கியபோது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத கந்த சஷ்டி சரசம்ஹார லீலைக்கு பின், திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இரண்டாவது சூரசம்ஹார லீலைவரும் 31ம் தேதி நடைபெறும். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோயிலில், தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகமாக தொடங்கியது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி,கொடியேற்ற விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி அருள்மிகு திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான தெப்பத் திருவிழாஇன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஜனவரி 22 முதல் ஜனவரி 31 வரைபத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவுக்கான கொடியேற்றம் கோயில் வளாக கம்பத்தடி மண்டபத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது .
முன்னதாக, உற்சவர் சுப்பிரமணிய ஸ்வாமி தெய்வானை சர்வ அலங்காரத்துடன் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார் .இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றும் விமர்சையாக நடைபெற்றது .
தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கிதையடுத்து, தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும் , மாலையில் சிம்ம வாகனம், அன்ன வாகனம் , சேஷவாகனம் ,பூதவாகனம், குதிரை வாகனம்,தங்க மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வரும்30 தேதி திங்களன்று காலை தெப்பம் முட்டுத்தள்ளுதலும் , ரத வீதிகளில் சிறிய வைரத்தேர் வலம் வருதலும் நடைபெறுகிறது.தொடர்ந்து, 31ம் தேதி செவ்வாய்யன்று காலை 11.00 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் சுவாமி தெப்பத்திற்கு எழுந்தருளலும் ,
இரவு தெப்ப மைய மண்டபத்தில் பத்தி உலாவிற்குப் பின் சுவாமி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெறுகிறது.தொடர்ந்து ,தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் முருகபெருமான் வீதிஉலாவின் போது சூரசம்ஹார லீலை நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது .கொடியேற்ற விழாவில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu