மதுரை அருகே தோப்பூரில் புதிய சேமிப்பு கிட்டங்கி: அரசு செயலர் தகவல்
![மதுரை அருகே தோப்பூரில் புதிய சேமிப்பு கிட்டங்கி: அரசு செயலர் தகவல் மதுரை அருகே தோப்பூரில் புதிய சேமிப்பு கிட்டங்கி: அரசு செயலர் தகவல்](https://www.nativenews.in/h-upload/2023/01/27/1649696-img-20230127-wa0034.webp)
மதுரை மாவட்டம்,திருநகர் பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பாண்டியன் கூட்டறவு விற்பனை அங்காடியில்கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து , கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பொதுமக்கள் நலன் சார்ந்து மிக நேரடியாக செயல்படக்கூடிய துறையாகும். கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 14.84 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரத்து 292 கோடி மதிப்பீட்டில் விவசாய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில், இதுவரை 14.61 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 11 ஆயிரத்து 823 கோடி மதிப்பீட்டில் விவசாய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் 259393 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களில் 2.08 லட்சம் நபர்களுக்கு ரூ.1417.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 141302 விவசாயிகளிடமிருந்து 962327 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூபாய் 1967.94 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், மாநில அளவில் மொத்தம் 3504 நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது 1367 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சூழ்நிலைக்கேற்ப மீதமுள்ள நெல் கொள்முதல் நிலையங்களையும் விரைந்து ஏற்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். தமிழகத்தில் மொத்தம் 35இ595 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளை புனரமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி "நம்ம ஊரு நம்ம நியாய விலைக் கடை" திட்டத்தின் கீழ் 4845 நியாய விலைக் கடைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் திறந்த வெளியில் சேமிக்கப்படுவதால் மழை நேரத்தில் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்தன. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் திறந்த வெளியில் தார்பாய்களைக் கொண்டு நெல் சேமிக்கும் நடைமுறையை முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென உத்தரவிட்டார்.
மேலும் ரூபாய் 238 கோடி மதிப்பீட்டில் 20 இடங்களில் மொத்தம் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கிகள் கட்ட உத்தரவிட்டார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரையில் தோப்பூர் பகுதியில் புதிய உணவுப் பொருள் சேமிப்பு திட்டங்கள் கட்டப்பட்டு வருகிறது என கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது, இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்) பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை) மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.முருக செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu