பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி
X

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் தாயாரிடம் அரசின் நிதி உதவியைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  அனீஸ் சேகர் வழங்கினர்.

வாழ்வாதாரத்திற்கு தன்னுடைய மூத்த மகனுக்கு அரசு வேலை வழங்குமாறு அவரது தாயார் கோரிக்கை வைத்துள்ளார்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்துக்கு அரசு நிதியூதவி அளிக்கப்பட்டது.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் தாயாரிடம் அரசின் நிதி உதவியைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர். அப்பொழுது மூத்த மகனுக்கு வேலை வழங்க வேண்டுமென அரவிந்தராஜ் தாயார் கோரிக்கை விடுத்தார்.

மதுரை , பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜின் குடும்பத்தினரை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் இணைந்து முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சத்திற்கான காசோலையும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரொக்கப்பணம் மொத்தம் 5 லட்சம் ரூபாயை உயிரிழந்த அரவிந்தராஜின் தாயாரிடம் வழங்கினர். மேலும், அரவிந்தராஜின் தாயார் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தன்னுடைய மூத்த மகனுக்கு ( நரேந்திரன்) அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, அரவிந்தன் தாயார் கூறும்போது என் மகனை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் மீதி இருக்கும் ஒரு மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்.அரவிந்தராஜ் சகோதரன் நரேந்திரன் கூறும் போது

எனக்கு இருந்த ஒரு தம்பியை இழந்து விட்டேன் எனது தாயாரை கவனித்துக் கொள்ள என்னை விட்டால் வேறு உறவுகள் இல்லை எனக்கும் சரியான வேலை இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறேன் ஆகையால், எனது தாயாரை கவனித்துக் கொள்ளவும் எனது வாழ்வாதாரத்திற்கும் அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என்று எண்ணி மகிழ கூறினார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில், கடந்த தை மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அதே ஊரைச் சேர்ந்த அரவிந்தராஜ் (24). என்பவர் ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் இறந்து விட்டார். காங்கிரஸ் கட்சியின். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிலை குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை , அவரது குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அரவிந்த்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்டத்தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் ,பாலமேடு நகர தலைவர் வைரமணி, சந்திரசேகர் வடக்கு வட்டாரத் தலைவர் காந்தி , தெற்கு வட்டார தலைவர் கல்லணை, ஒன்றியக் கவுன்சிலர் சுப்பாராயல், சோழவந்தான் சங்கரபாண்டி, சரந்தாங்கி முத்து, முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கேணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story