சோழவந்தான் செயல்படாத மின்கோபுர விளக்கு எரியாததால் பக்தர்கள் அவதி

சோழவந்தான் செயல்படாத மின்கோபுர விளக்கு எரியாததால்  பக்தர்கள் அவதி
X

 சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக எரியாத நிலையில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு

கோவில் முன்பு உள்ள உயர் மின் கோபுர விளக்கு கடந்த சில வருடங்களாக பழுதாகி எரியாமல் இருக்கிறது

சோழவந்தானில் செயல்படாத உயர் மின் கோபுர விளக்கு எரியாததால் பக்தர்கள் அவதிப்படும் நிலை தொடர்கிறது

மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோவிலில், ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் அம்மனை தரிசிக்க வருகை புரிவது வழக்கமாக இருந்து வருகிறது.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் பெண்கள் கோவிலுக்கு வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக, கோவில் முன்பு உள்ள உயர் மின் கோபுர விளக்கு கடந்த சில வருடங்களாக பழுதாகி எரியாமல் இருப்பதால் இரவு நேரங்களில் கோவில் முன்பு இருட்டாக உள்ளதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறுகின்றனர்.

மேலும் ,கோவில் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளதால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.மேலும், அடுத்து வரும் காலங்களில் பண்டிகை காலம் தொடங்குவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்மின் கோபுர விளக்கை சரி செய்து ஒளிரச்செய்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story