பாஜக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறது: வைகோ குற்றச்சாட்டு
![பாஜக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறது: வைகோ குற்றச்சாட்டு பாஜக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறது: வைகோ குற்றச்சாட்டு](https://www.nativenews.in/h-upload/2023/01/25/1648588-img-20230125-wa0007.webp)
மதுரை விமான நிவையத்தில் பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ
ஒரே நாடு , ஒரே மொழி என இந்துத்துவாவை வளர்க்க இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்கிறது என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ம.தி.மு. க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை பகுதியில் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து?நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இந்துத்துவா தத்துவத்தையும் சனாதன தர்மத்தை வைத்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஒரே கலாசாரம் என்று நடைமுறைக்கு ஒவ்வாததும், ஒருபோதும் நடக்க கூடாததுமான ஒரு விஷத்தை பிஜேபி கூட்டம் கக்கி கொண்டிருக்கின்றது.
அதற்கு சரியான பதிலை, தமிழ்நாடு கொடுக்கும் தமிழகத்தில் அதற்கு இடமில்லை என்பதை வரலாறு நிரூபிக்கத்தான் போகிறது. பாஜகவை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது சனாதன தர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்றுக்கொள்ளாது இந்துத்துவா தத்துவத்தினுடைய அடிப்படையில் தான் அவர்கள் நாட்டிலே ஒருமைப்பாட்டை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .
இது கோல்வால்கர் ஒரு காலத்தில் சொன்னது சனாதன தர்மம் இந்துத்துவா அதற்கு பிறகு இந்தி இந்திக்கு பிறகு சமஸ்கிருதம் இதுதான் அவருடைய திட்டம் அவருடைய நோக்கம் அது நடக்காது. பொதுக்கூட்டத்தில், அது பற்றி விரிவாக நான் சொல்வேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu