மதுரை அருகே காரில் திடீர் தீ: எரிந்து சேதம்

மதுரை அருகே காரில் திடீர் தீ: எரிந்து சேதம்
X

மதுரை விமானநிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

மதுரை விமான நிலையம் அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதமடைந்தது

மதுரை விமான நிலையம் அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை .இவர் தந்தை அண்ணாதுரை மற்றும் தாயாருடன், அருப்புக்கோட்டையில் உள்ள சகோதரி வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு இரவு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ,மதுரை அருப்புக்கோட்டை சாலையில், மதுரை விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக ,காரில் பயணித்தவர்கள் காரை நிறுத்தி வெளியேறியதால் யாருக்கும் எந்த ஒரு காயம் இல்லை.

இது குறித்து தகவலறிந்த அனுப்பானடி நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக காரில் வந்தவர்களுக்கு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து, இது குறித்து, பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் தீப்பிடிப்பதற்கான காரணிகளாக மின் கசிவு, பேட்டரி இணைப்பு, எரிபொருள் கசிவு மற்றும் எலி போன்ற விலங்கினங்கள் வயர்களை சேதப்படுத்துதல் ஆகியவை முக்கியமாகக் கூறப்படுறது.

Tags

Next Story