பாலமேடு மகாலிங்கசுவாமி மடத்துக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கு கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் வருகின்ற 16ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தை இரண்டாம் நாள் நடைபெறு உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் காளைகளுக்கு பரிசுகள் வழங்குவது தொடர்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கு கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி, தங்கமணி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, மாடுபிடி வீரர்களுக்கு சிறந்த காளைகளுக்கும் கார், பைக் பரிசாக வழங்கப்படும் . மேலும், மாடுபிடி வீரர்களுக்கு நாட்டுப்பசு, இருசக்கர வாகனம், தங்க காசு, ஷேர் சைக்கிள் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார் .இதைத் தொடர்ந்து, அனைத்து கமிட்டி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களின் பெயா், விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu