சோழவந்தான் அருகே நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்

சோழவந்தான் அருகே  நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
X

பெரியாறு பிரதான இரு போக பாசன விவசாயிகள் நீரினை பயன்படுத்துவோர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு வாடிப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது

பெரியாறு பிரதான கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

வாடிப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் பேரணை முதல் அலங்காநல்லூர் வரை உள்ள பெரியாறு பிரதான இரு போக பாசன விவசாயிகள் நீரினை பயன்படுத்துவோர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு வாடிப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், தலைவர்களாக 12 பேரும், உறுப்பினர்களாக 49 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், தலைவர்களாக முருகன், அண்ணாதுரை, கிருஷ்ணன், விஜயன், ராமசாமி, ரவீந்திரன், செல்வம், அப்பாஸ், பெரியசாமி, மீனாட்சி ,ராஜு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 49 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பெரியாறு பிரதான கால்வாய் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் சைய்யது ஹபீப், உதவி, பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். பொதுப்பணி துறை அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி