மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டெமோ தெரபி சாதனம் தொடக்கம்
![மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டெமோ தெரபி சாதனம் தொடக்கம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டெமோ தெரபி சாதனம் தொடக்கம்](https://www.nativenews.in/h-upload/2023/01/21/1646616-img-20230121-wa0019.webp)
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கிளியர் ஆர் டி மற்றும் சின் கரணி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சாதனம் குறித்து பேசிய மருத்துவமனை தலைவர் எஸ். குருசங்கர் வைக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கிளியர் ஆர் டி மற்றும் சின் கரணி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சாதனம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் தலைவர் எஸ். குருசங்கர் தலைமை வகித்தார்.காமினி குருசங்கர் முன்னிலை வகித்தார்.கதிரியக்க புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் குருசங்கர் பேசுகையில், எந்த வகையான புற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தொழில்நுட்பமும், நவீன நோயறிதல் முறைகளும் உள்ளன. ஸ்கிரீனிங் மற்றும் சிகிச்சைகளும், பராமரிப்பும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
கதிரியக்க சிகிச்சை முறையில் நவீன சாதனத்தை நாங்கள் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீனாட்சி மிஷன் மருத்துவமனை தொடர்ந்து சிறப்பான சாதனையை நிகழ்த்தி வருகிறது. உடல் நல பராமரிப்பு சேவை தரநிலையில் குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உயர்த்துவது இலக்காகக் கொண்டு இது தீவிரமாக செயலாற்று வருகிறது. டோமோ தெரபி என்பது புற்று நோய்க்கான ஒரு சிகிச்சை செய்முறையாகும். நோயாளி சிகிச்சை மேஜிக்கல் படுத்திருக்கும் நிலையில் வேறுபட்ட பல திசைகளில் இருந்து புட்டுக்கட்டி இலக்காகக் கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை இதன் மூலம் செய்யப்படுகிறது.
புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை அடங்கும். தீவிரமான புற்று கட்டிகளுக்கு குறுகிய காலத்தில் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu