மதுரையில் அரசு மருத்துவமனை அருகே தேங்கியுள்ள கழிவுநீர்

மதுரையில்  அரசு மருத்துவமனை அருகே தேங்கியுள்ள கழிவுநீர்
X

மதுரையில் அரசு மருத்துவமனை அருகே கழிவு நீர் தேங்கி உள்ளது.

மதுரையில் அரசு மருத்துவமனை அருகே தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள தெருவில், ( வார்டு எண் 71 ) பல நாட்களாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. நான்கு முனை சந்திப்பிலும் இந்த கழிவுநீர் தேங்கி கொண்டிருப்பதோடு அல்லாமல் மேலும், மேலும், அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கேட்ட போது, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். தற்காலிகமாக சரி செய்து, சரி விட்டு போகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்த பிரச்சினை தொடர்வதால், அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்தபிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி