மதுரையில் தை அமாவாசை: கோயில்களில் தர்பணம்

மதுரையில் தை அமாவாசை: கோயில்களில் தர்பணம்
X

பைல் படம்

வரும் சனிக்கிழமை தை (ஜன.21 ) அமாவாசை யையொட்டி கோயில்களில் தர்பணம் செய்து வைக்கப்படுகிறது

மதுரை கோயில்களில் வரும் சனிக்கிழமை தை (ஜன.21 )அமாவாசையையொட்டி தர்பணம் செய்து வைக்கப்படுகிறது.

தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சனி அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புதிய ஆடைகள் ஆகியவற்றை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களை அவமதித்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதன் மூலமும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலமும் சனி பகவானின் ஆசியை பெறலாம்.

மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், 21.01.23. சனிக்கிழமை காலை 6.15...மணி முதல் 7.15..மணி வரையிலும், மதுரை வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 7.15..மணி முதல் 8.20..மணி வரையிலும், மதுரை தாசில்தார், சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30...மணி முதல் 9.25..மணி வரையிலும், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்தில், காலை 9.30..மணி முதல் காலை 10 மணி வரை தர்பணம் செய்து வைக்கப்படும். தர்பணத்துக்கு வருவோர், தாம்பாளம் ஓன்று, டம்ளர் ஓன்று, கறுப்பு எள் பாக்கெட் கொண்டு வரவேண்டும்.மேலும் , தொடர்புக்கு 9942840069, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story