மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே புதைவடக் கம்பிகள் மாற்றம் செய்யும் பணி தீவிரம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே புதைவடக் கம்பிகள் மாற்றம் செய்யும் பணி தீவிரம்
X
பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி மின்துண்டிப்பு செய்து மின்கம்பிகளை இறக்கி திருத்தேர் கடந்த பின் மின் சீரமைப்பது வழக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே புதைவடக் கம்பிகள் மாற்றம் செய்ய மின் வாரியம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில், சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. திருத்தேர் வலம் வரும் நான்கு மாசி மற்றும் சித்திரை வீதிகளில் ஏறத்தாழ 9 கிமீ க்கு மேல் உயரழுத்த மின் பாதையும்,18 கிமீ க்கும் மேல் தாழ் மின் அழுத்த மின்பாதையும் செல்கின்றன.

திரளாக கூடுகின்ற பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி இம்மின் பாதைகளில் மின்துண்டிப்பு செய்து மின்கம்பிகளை இறக்கி திருத்தேர் கடந்த பின் மின் சீரமைப்பு செய்யப்படுகிறது.

மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய இக் கடினமான பணி நீண்ட நேர மின்துண்டிப்புக்கும் காரணமாகிறது. இதனை தவிர்ப்பதற்கு, இந்த மின்பாதைகளை புதைவடக் கம்பிகளாக கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ‌தொடர்ந்து ‌கோரிக்கை விடுத்து வந்தனர். தேரோடும் வீதிகளில் மேல் செல்லும் மின்பாதைகள் புதைவடக் கம்பிகளாக மாற்றப்பட வேண்டும் என்பது வாரியத்தின் முடிவாகவும் உள்ளது .

இந்நிலையில், தற்போது, இப்பணி செயலாக்கத்திற்கு வந்துள்ளது. ஏறத்தாழ 11 கோடி செலவில் நடைபெறும் இப்பணியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இப்பணி ஒரு வருட காலத்திற்குள் நிறைவு பெற கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது‌ .இதன் மூலம் மிகுந்த பாதுகாப்பான இம்முறையினால் சித்திரைத் திருவிழாவில் திருத்தேர் வலம் வரும் போது மிக எளிதாக மின்துண்டிப்பு செய்ய இயலும். இதனால், மின்துண்டிப்பு கால அளவும் வெகுவாக குறையும்‌ . மேலும் நகரின் அழகை இது மெருகேற்றும் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story