மதுரை மத்திய சிறையில் புத்தக தான் மையம்
![மதுரை மத்திய சிறையில் புத்தக தான் மையம் மதுரை மத்திய சிறையில் புத்தக தான் மையம்](https://www.nativenews.in/h-upload/2023/01/27/1649637-img-20230127-wa0003.webp)
மதுரை மத்திய சிறையில் , ஒரே நாளில் புத்தக தான மையத்தில் 4500க்கும் அதிகமான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது
மதுரை மத்திய சிறையில், சிறை வாசிகள் நல்வழிபடுத்தும் வகையிலும் சிறை வாசிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மத்தியசிறையில் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய அதிக நுால்கள் கொண்ட நூலமாக அமைத்திட, புத்தகங்கள் தானமாக பெற புத்தக தான மையம் ஒன்றை சிறை அங்காடியில் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இந்த மையத்தில், பல்வேறு தன்னார்வலர்கள் ஒன்றினைந்து சுமார் 4540 புத்தகங்கள் இன்று மட்டும் புத்தக தானம் செய்தனர். மேலும், பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியசிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் புத்தகங்களை தானமாக வழங்கலாம் எனவும், மேலும் புத்தக தானம் செய்ய விரும்புவோர் 0452-2360034, 0452-2360035 என்ற தொலைபேசி எண் தொடர்பு கொள்ளலாம் எனவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மையச் சிறை (Madurai Central Prison) தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையாகும். இது 1865-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு 1252 கைதிகளை வைக்கும் வசதி உள்ளது. இச்சிறைச்சாலை 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இச்சிறையில் பெண் சிறைக் கைதிகளின் வளாகம் உள்ளது. இச்சிறை வளாகத்துள் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (IGNOU) மையம் உள்ளது. இப்பல்கலைககழகம் நடத்தும் படிப்புகளில் கைதிகள் இலவசமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் (அதற்கான செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது). அவர்களுக்கான பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளும் இவ்வளாகத்துள்ளாகவே நடத்தப்படுகின்றன.
மதுரையிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாதவூர் அருகே அமைந்த இடையபட்டி கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தில் அனைத்து வசதிகளுடன் மதுரை மத்திய சிறை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் கட்டுமான பணி நடக்க உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu