/* */

மனிதநேயமிக்க மருத்துவர்களாக உருவாக வேண்டும்: கலெக்டர்

முதலாம் ஆண்டிற்கான புத்தகங்களையும், மருத்துவ உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கிப் பாராட்டினார்.

HIGHLIGHTS

மனிதநேயமிக்க மருத்துவர்களாக உருவாக வேண்டும்: கலெக்டர்
X

புத்தகங்களை வழங்கும் மாவட்ட ஆட்சியர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அரசுப்பள்ளிகளில் படித்து நடைபெற்று முடிந்த நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு முதலாம் ஆண்டிற்கான புத்தகங்களையும், மருத்துவ உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கிப் பாராட்டினார். நடைபெற்று முடிந்த நீட்தேர்வில், அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ - மாணவிகள் பலரும் தேர்ச்சி பெற்று மருத்துவப்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சின்னதுரை, தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவனேசன், கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி, சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகல்திகா, குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நர்மதா ஆகிய 5 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு கோயம்புத்தூர்(2), திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

அதேபோல, தென்காசி மாவட்டத்தைச்சேர்ந்த முர்சிதபானு, நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த நந்தினி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா, சேலத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, கோவிந்தராஜ், திருவள்ளுர் மு.சகானா பர்வீன், கோயம்புத்தூர் ஆப்ரின்ஜகான், ஈரோடு தீட்சித், நாகப்பட்டினம் பாலகுமாரன் ஆகிய 10 மாணவ மாணவிகளுக்கும் கரூர் அரசு மருத்துவக்கல்லாரியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவ மாணவிகளுக்கு மட்டுமல்லாது, அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 10 நபர்களுக்கும் என மொத்தம் 15 மாணவ மாணவிகளுக்கும் முதலாம் ஆண்டிற்கு தேவையான புத்தகங்கள், மருத்துவ உபகரணங்களை கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15,000 வீதம் ரூ.2.25லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் ஸ்டெத்தஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்கழ்வில் ஸ்டெத்தஸ் கோப்களை மாணவ - மாணவிகளுக்கு கழுத்தில் அணிவித்து மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 7 Feb 2022 11:00 AM GMT

Related News