/* */

குமரி சிவன் கோவிலில் பாரம்பரிய 1008 சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு

கன்னியாகுமரி சிவன் கோவிலில், பாரம்பரிய மற்றும் பிரசித்தி பெற்ற 1008 சங்காபிஷேகம் பூஜை நடந்தது.

HIGHLIGHTS

குமரி சிவன் கோவிலில் பாரம்பரிய 1008 சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு
X

ஸ்ரீ குகநாதேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சங்காபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

புகழ் பெற்ற முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள பழமை மற்றும் பிரசித்தி பெற்ற குகநாதேஸ்வரர் கோவிலில் , ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிறப்பு பெற்ற சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து 1008 சங்குகளை வைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 29 Sep 2021 1:15 PM GMT

Related News