/* */

குமரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சிசிடிவி கட்டாயம் : டிஎஸ்பி உத்தரவு

குற்றங்களை தடுக்க குமரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் ம் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டுமென டிஎஸ்பி உத்தரவிட்டார்

HIGHLIGHTS

குமரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும்  சிசிடிவி கட்டாயம் : டிஎஸ்பி உத்தரவு
X

கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம்(பைல்படம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி குற்றங்களை தடுப்பதிலும் குற்றவாளிகளை கண்டறிவதிலும் மூன்றாவது கண்ணாக செயல்படும் சிசிடிவி கேமராக்களுக்கு முக்கியத்துவம் அளித்து மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் மாவட்ட காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும், வணிகர்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை சர்வதேச புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வரும் கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள இயற்கை காட்சிகள், கடற்கரை, விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலை போன்றவற்றை ரசிப்பது வழக்கம். சபரிமலை சீசன் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வருகை தருவது வழக்கம்.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளில் உள்ள அனைத்து லாட்ஜுகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே லாட்ஜ் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து லாட்ஜ்களிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என கன்னியாகுமரி டி.எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 29 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  2. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  3. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  4. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  5. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  6. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  7. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  8. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  9. தமிழ்நாடு
    முதல் முறையாக தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மே தின வாழ்த்து
  10. இந்தியா
    பிஎப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா? இத முதல்ல படியுங்க