/* */

குடியரசு தினம் : பள்ளி மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள்

காஞ்சிபுரம் திருக்காளத்தி மேடு பகுதியில் சாஹானா யோகா நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள் நடைபெற்றது .

HIGHLIGHTS

குடியரசு தினம் :  பள்ளி மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி நடந்த யோகாசனம்  போட்டி

காஞ்சிபுரம் , திருக்காளிமேடு பகுதியில் இயங்கி வரும் சாஹானா யோகா நிலையம் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய சிறுவர்களுக்கு யோகாசனம் பயிற்சியினை இலவசமாக அளித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின்73வது குடியரசு தினத்தையொட்டி அப்பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் கீழ் நடைபெற்றது.

இப்போட்டியினை காஞ்சிபுரம் வணிக குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் V.கணேசன் துவக்கி வைத்தார். பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு துறை தலைவர் எம். செந்தில் தங்கராஜ், மற்றும் யோகா பயிற்சியாளர்கள் யோகா பயிற்சி குறிப்புகள் மற்றும் உடல் நலன் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் பல பிரிவுகளின் கீழ் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற நபர்கள் பரிசுகளை வென்றனர்.

இந்நிகழ்ச்சியில் சாஹானா யோகா நிலையம் நிறுவனர் நிர்மல் குமார்,. ஒருங்கிணைப்பாளர் சமந்தா நிர்மல் குமார், பயிற்சியாளர் தேன்மொழி மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 8:15 AM GMT

Related News