/* */

காஞ்சிபுரம் அத்தி வரதர் காட்சி கூடத்தில் ஜனாதிபதி தரிசன படம் சேதம்

காஞ்சிபுரம் அத்திவரதர் காட்சி கூடத்தில் ஜனாதிபதி தரிசன படம் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அத்தி வரதர் காட்சி கூடத்தில் ஜனாதிபதி  தரிசன படம் சேதம்
X

காஞ்சிபுரம் அத்திவரதர் காட்சி கூடத்தில் புகைப்படங்கள் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளன.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்திலான வரதர் சிலை எடுக்கப்பட்டு நாற்பத்தி எட்டு நாட்கள் காட்சிப்படுத்தப்படும்.

உலகப்புகழ் பெற்ற அத்தி வரதர் விழா கடந்த 2019 ல்ஜீலை 1ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 17ம் தேதி நிறைவு பெற்று மீண்டும் கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் வைக்கப்பட்டது.

இதை தரிசிக்க ஒரு கோடி பக்தர்கள் 48 நாட்களும இடைவிடாது சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள் இந்திய ஜனாதிபதி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் என பலரும் நின்ற மற்றும் சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரை தரிசித்தனர்.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்தும், அதன் நினைவாக அத்தி மர கன்றுகளை பல ஏக்கர் பரப்பளவில் மட்டும், ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் அத்தி வரதர் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

இதில் அத்தி வரதர் சயன மற்றும் நின்ற கோலத்தில் புகைப்படங்கள் மற்றும் அதன் நிகழ்வுகள் முக்கிய தலைவர்களின் வருகை ஆகியவை புகைப்படங்களாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அதில் இருந்த புகைப்படங்கள் பராமரிப்புஇன்றி கீழே விழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த மண்டபத்திற்கு மேல் கூரை அமைக்காமல் மழைக்காலங்களில் புகைப்படங்கள் நனைந்து சேதம் அடைந்து வருகிறது.

அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்தி வரதர் தரிசனம் புகைப்படம் காட்சி கூட புகைப்பட கேலரி விழுந்து விழுந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது.

இதை கூட கவனிக்காமல் மாவட்ட நிர்வாகம் அதை சரியும் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது வருத்தத்தில் உள்ளது. ஜனாதிபதி புகைப்படமே இந்த நிலை என்றால் மற்ற புகைப்படங்களின் பராமரிப்பு நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Updated On: 22 April 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!