/* */

ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி தனுஷ்யாவுக்கு பாராட்டு..!

ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் பரதக்கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என காஞ்சிபுரம் மாணவி தனுஷ்யா தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி தனுஷ்யாவுக்கு பாராட்டு..!
X

காஞ்சிபுரத்தில் பொதுமக்களிடம் ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் நாட்டியக்கலை குறித்து நூதன விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் மாணவி தனுஷ்யா.

காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதியர் ரகுபதி, நித்தியா. இவர்களது மகள் தனுஷ்யா. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் சிறுவயது முதலே நாட்டியக்கலையை, பல ஆண்டுகளாக முறைப்படி பயின்று அரங்கேற்றம் செய்துள்ளார்.

தற்போது, பொதுமக்கள் இடையே பரதக்கலை குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததை உணர்ந்த மாணவி தனுஷ்யா, ஏதேனும் ஒரு விளையாட்டு மூலம் அதனை தான் மேற்கொள்ள விரும்பினார். இதனை தன் பெற்றோரிடம் தெரிவித்ததின் பேரில், ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பில் ஓராண்டாக இணைந்து பயிற்சி பெற்று வருகிறார். இதையடுத்து, பரதக்கலை குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது போட்டிகளின் நடுவே ஸ்கேட்டிங் உபகரணங்கள் அணிந்து நடனமாடி விழிப்புணர்வு செய்து வருகிறார், மாணவி தனுஷ்யா.

இதற்கு உறுதுணையாக இருந்து வரும் தனது பெற்றோருக்கும் நடனம், ஸ்கேட்டிங் பயிற்சியாளர்களுக்கும் மாணவி தனுஸ்யா நன்றி தெரிவித்தார். இம்மாணவிக்கு ஈகிள் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் எஸ்.பாபு பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவி தனுஷ்யாவின் வித்தியாசமான முயற்சிக்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Updated On: 26 Jun 2022 2:00 PM GMT

Related News