/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வு எழுதிய 4,356 பேர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெற்ற கிராம உதவியாளர் தேர்வினை 4356 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வு எழுதிய 4,356 பேர்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டது.

ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற 04.12.2022 (ஞாயிற்றுக்கிரழமை) அன்று எழுத்துத் தேர்வு கீழ்கண்ட வட்டங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் மூன்று தேர்வு மையங்களும் வாலாஜாபாத் வட்டத்தில் மூன்று தேர்வு மையங்களும் உத்திரமேரூரில் இரண்டு தேர்வு மையங்களும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஒரு தேர்வு மையமும் குன்றத்தூர் வட்டம் சார்பாக ஒரு தேர்வு மையங்கள் என 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

தேர்வுக்கு காலை 9.30 மணி அளவில் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர் எனவும், தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுது பயிற்சி மூலம் நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பயிற்சி தேர்வுகளை தேர்வு மைய அலுவலர்கள் வாசிக்க தேர்வுகள் பிழையின்றி எழுத வேண்டும்.கருப்பு மையில் ஆன பால் பாயிண்ட் பேனாவில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு கைபேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தேர்வு மையத்தில் தேர்வுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் , கழிவறை மற்றும் திடீர் மருத்துவ தேவைகளுக்கு சுகாதார மருத்துவர்கள் , செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் வட்டத்தில் சுமார் 2457 தேர்வர்கள் எஸ். எஸ். கே. வி. மெட்ரிகுலேஷன் பள்ளி , பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமல்லன் மெட்ரிகுலேஷன் பள்ளி என மூன்று மையங்களில் தேர்வு விண்ணப்பித்த நிலையில் 1929 நபர்கள் தேர்வு எழுதினர்.வாலாஜாபாத் வட்டத்தில் 904 விண்ணப்பித்த நிலையில் 724 நபர்கள் தேர்வு எழுதினர்.

உத்திரமேரூர் வட்டத்தில் 1236 பேர் விண்ணப்பித்த நிலையில் 908 பேர் இன்று தேர்வு எழுதினர். ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தின் நடைபெற்ற தேர்வில் 436 பேர் விண்ணப்பித்த நிலையில் 341 பேர் தேர்வு எழுதினர்.குன்றத்தூர் வட்டத்தில் 631 பேர் விண்ணப்பத்தில் நிலையில் 454 பேர் தேர்வு எழுதினர்.

ஆக மொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5654 பேர் விண்ணப்பித்த நிலையில் 4356 நபர்கள் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 1308 பேர் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத மையத்திற்கு வரவில்லை.தேர்வுகள் நடைபெற்று வரும் காஞ்சிபுரம் , உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை பார்வையிட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

Updated On: 4 Dec 2022 1:12 PM GMT

Related News