இரண்டு தொகுதிகளை கேட்டு கமல்ஹாசன் பிடிவாதம்?

இரண்டு தொகுதிகளை கேட்டு  கமல்ஹாசன் பிடிவாதம்?
X

திமுக தலைவர் ஸ்டாலின், அருகில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்பு படம்)

மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கோவை, தென் சென்னை ஆகிய தொகுதிகளை அக்கட்சி கேட்டு வருகிறது. ஆனால் ஒரு தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மறைமுகமாகவே நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விரைவில் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே சுமுக உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது.

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை