சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு வெள்ளி தோறும் பூஜை: திருஷ்டி கழிப்பா...?.
Erode News- சத்தியமங்கலம் காவல் நிலையம் முன்பு பூஜை செய்த போது எடுத்த படம்.
Erode News, Erode News Today- சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து வருவது, குற்றங்கள் குறைய வேண்டியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக காவல் நிலையங்களில் பல்வேறு தரப்பு மக்களும் சாதி, சமய, வேறுபாடின்றி புகார் கொடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் வந்து செல்கின்றனர். கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கூட போலீசார் தீர்த்து வைப்பார்கள் என நம்பி பொதுமக்கள் காவல் நிலையம் வருகின்றனர்.
ஆனால், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீசாரே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளிக்கிழமை தோறும் இரவு தீபாரதனை காட்டி பூஜை செய்து திருஷ்டி கழித்து தேங்காய் உடைக்கின்றனர். எதற்காக என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது?. அதிகாரிகளுக்கு மாமூல் குவிய வேண்டியா?. குற்ற சம்பவங்கள் குறைய வேண்டியா? அல்லது காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு இல்லையா? எந்த கணக்கில் எடுத்து கொள்வது? என்று.
அரசு அலுவலகங்களில் சாமி, படங்கள் வைத்து வழிபாடு செய்ய கூடாது என 1968 ஏப்ரல் 29ம் தேதி தமிழக அரசு உத்தரவு போட்டு இருக்கிறது. இதையெல்லாம் போலீசாரே பின்பற்றவில்லை என்றால், என்ன செய்வது?. பூஜை செய்வதை பார்த்து மற்ற மதத்தினர் வந்தால் போலீசார் அனுமதிப்பார்களா?. எனவே இது போன்ற சம்பவங்களால் அரசிற்கு தலைக்குனிவு தான் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu