ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் நாளை (ஜன.25) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு வட்டத்தைத் தவிர மற்ற 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நாளை (ஜன.25) சனிக்கிழமை நடைபெறுகிறது.
அதன்படி, பெருந்துறை வட்டத்தில் சென்னிமலை மேலப்பாளையம் ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் வடுகபட்டி ரேஷன் கடையில் ஈரோடு உதவி ஆணையாளர் (கலால்) தலைமையிலும், கொடுமுடி வட்டத்தில் ஒத்தக்கடை ரேஷன் கடையில் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அக்கரைகொடிவேரி ரேஷன் கடையில் கோபி ஆர்.டி.ஓ. தலைமையிலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது.
இதேபோல், நம்பியூர் வட்டத்தில் எம்மாம்பூண்டி குப்பிபாளையம் ரேஷன் கடையில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், பவானி வட்டத்தில் குப்பிச்சிபாளையம் ரேஷன் கடையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையிலும், அந்தியூர் வட்டத்தில் சங்கராபாளையம் வட்டகாடு ரேஷன் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் சிக்கரசம்பாளையம் ரேஷன் கடையில் சக்தி சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும் நடைபெறுகிறது.
அதேபோல், தாளவாடி வட்டத்தில் இக்கலூர் ரேஷன் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு வேண்டியும், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu