மனைவிக்கு மரியாதை: ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா

மனைவிக்கு மரியாதை: ஈரோட்டில்  மனைவி நல வேட்பு விழா
X

Erode News- ஈரோடு மனவளக்கலை மன்றம் டிரஸ்ட் சார்பில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. இதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் கனிகள் மற்றும் மலர்கள் கொடுத்த போது எடுத்த படம்.

Erode News- ஈரோட்டில் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு தின விழா கொண்டாடப்பட்டது.

Erode News, Erode News Today- ஈரோட்டில் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு தின விழா நேற்று (30ம் தேதி) கொண்டாடப்பட்டது.

ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு விழா நேற்று (30ம் தேதி) நடைபெற்றது. ஈரோடு மனவளக்கலை மன்றம் டிரஸ்ட் சார்பில் வேதாத்திரி மகரிஷியால் அறிவிக்கப்பட்ட மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி ஆக.30ம் தேதி கொண்டாடப்படும். இவ்விழாவில் மனைவியை கவுரவிக்கும் விதமாக கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவிமார்கள் தங்களது கணவருக்கு கனி கொடுத்தும் வாழ்த்துவது வழக்கமாகும்.

இதன்படி, நடப்பாண்டுக்கான விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. வேதாத்திரி பதிப்பக இணை இயக்குனர் பேராசிரியர் டி.ஆர். ஆறுமுகம் வரவேற்று பேசினார். மனைவி நல வேட்பு குறித்து முதுநிலை பேராசிரியரும், ஆழியார் உலக சமுதாய சேவா சங்க விஷன் இயக்குனர் (கல்வி) டாக்டர் கே. பெருமாள் பங்கேற்று பேசினர். சிறப்பு தம்பதியராக டாக்டர் கே. பெருமாள் சந்திரா தம்பதியர், ஈரோடு லட்சுமி ஏஜென்சி வி. எம். இளங்கோ தம்பதியர், நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் யூ.எஸ். ரகுபதி தம்பதியர், ஈரோடு ஷா பாலிமர்ஸ் பி. சுரேஷ் தம்பதியர், ஈரோடு தேவா எலக்ட்ரிகல் ஏஜென்சி டி.தேவகுமார் தம்பதியர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக இசைக் கலைமணி ராஜபாளையம் உமா சங்கர் "மாண்புமிகு மனைவி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் ஆழியார் அறிவு திருக்கோயில் அறங்காவலர் வி.ராஜமாணிக்கம் நன்றி கூறினார். முன்னதாக குரு வணக்கம் மற்றும் தவம் ஆகியவற்றை துணைப் பேராசிரியர் எஸ். மங்கையர்க்கரசி, ஈரோடு மனவளக்கலை மன்றம் டிரஸ்ட் துணைத் தலைவர் எம்.சந்திரா ஆகியோர் நடத்தினர்.விழாவில் 300க்கும் மேற்பட்ட தம்பதியர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!