சத்தியமங்கலம் அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலத்தில் இருந்து கே.என்.பாளையம் வழியாக செல்லும் சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் சாலையோரம் அமர்ந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் சாலையோரம் அமர்ந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. உணவு தேடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வனச்சாலைகளை கடந்து விவசாய பகுதிகளில் சில நேரங்களில் வருவதுண்டு.

அதேபோன்று, கடம்பூரில் வாழும் மலைகிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அங்கு விளையும் தானியங்களை விற்பனை செய்வதற்காக வாகனத்தில் கொண்டு வந்து சத்தியமங்கலம் உள்ள சந்தையில் விற்பனை செய்து மீண்டும் மாலை இரவு நேரங்களில் மீண்டும் கடம்பூர் செல்வர்.

இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கே.என்.பாளையம் வழியாக கடம்பூர் மலைக்கிராமம் நோக்கி வாகனத்தில் வந்துள்ளனர். மல்லியம்மன் கோவில் அருகே வந்த போது சாலையோரமாக ஒரு சிறுத்தை ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்ததை கண்டு வாகனத்தில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

வாகனத்தில் இருந்த வெளிச்சம் பட்டதும் சிறுத்தை சிறிது தூரம் முன்னோக்கி சென்று வனப்பகுதியில் சென்று மறைந்தது. இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை அச்சுறுத்தல் வகையில் வீடியோ, போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கடம்பூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story