தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க பாதயாத்திரை..!

தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க பாதயாத்திரை..!
X
தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க பாதயாத்திரை..!.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

நாளை (9ம் தேதி) மத நல்லிணக்கப் பாதயாத்திரை நடைபெறவுள்ளது

பா.ஜ. மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள்,வன்முறையை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதை கண்டிக்க இந்த பாதயாத்திரை

காலை 8 மணிக்கு சென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் தொடங்கி, சீனாபுரம் முருகன் கோவிலில் நிறைவடைகிறது

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாளை (9ம் தேதி) மத நல்லிணக்கப் பாதயாத்திரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ. மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

பாதயாத்திரை நோக்கம்

எனவே, அவர்களது செயல்பாடுகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் மாபெரும் மத நல்லிணக்க பாத யாத்திரை நாளை (9ம் தேதி) காலை 8 மணிக்கு சென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் தொடங்கி, சீனாபுரம் முருகன் கோவிலில் நிறைவடைகிறது.

பங்கேற்போருக்கு அழைப்பு

இந்த பாதையாத்திரை பயணத்தில் அனைத்து நிலை காங்கிரஸ் நிர்வாகிகளும், சார்பு அமைப்பினரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

Tags

Next Story