நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரம்

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரம்
X

ஈரோடு திருநகர் காலனி வாக்குச்சாவடி மையத்தில் சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடை பெறுகிறது. இதையொட்டி, இடைத்தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்கு அளிக்கும் வகையில் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

மேலும், வாக்குச்சாவடி மையங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் நடக்கிறது. அதேபோல், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பாக சென்று வருவதற்கான வழிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மக்கள் வந்து வாக்கு அளிக்க சிரமம் ஏற்படாத வகையில் இப்போதே பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்கு அளிக்கும் வகையில் அவர்கள் வரிசையில் நிற்பதற்காக பேரி கார்டுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனால், இப்போதே தொகுதி முழு வதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது

Tags

Next Story