அத்தாணி கைகாட்டி பிரிவில் சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவர் கைது
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |3 Jun 2022 12:15 AM IST
அத்தாணி கைகாட்டி பிரிவில் தமிழக அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்தாணி கைகாட்டி பிரிவில் தமிழக அரசின் மது பாட்டில்களை அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக ஆப்பக்கூடல் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது பாலமுருகன் என்பவர் 15 பிராந்தி பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து, 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu