100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் வாகனப் பேரணி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.
ஈரோட்டில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025-ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியரகத்தில் துவங்கி பரிமளம் மஹால் வரை சென்றது. இப்பேரணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வினை ஏற்படுத்திச் சென்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, உதவி ஆணையர் (மண்டலம் 4) லதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu