தனியார் கல்லூரியில் இலவச ரத்த அழுத்த, நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்

தனியார் கல்லூரியில் இலவச ரத்த அழுத்த, நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்
X

வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கோபி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோபி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம், வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லூரி மற்றும் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் நேற்று (19ம் தேதி) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமை பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தங்கவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அடிக்கடி இது போன்ற பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வரும் உடல்நல கோளாறுகளை ஆரம்பத்திலேயே சரிப்படுத்தி விடலாம் என்றும் இதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடையே அவர் உரையாற்றினார்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கல்லூரியின் இதர ஊழியர்கள், நர்சிங் கல்லூரியின் மாணவ மாணவிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை ஆகிய சோதனைகளை செய்து தங்கள் உடல் நலம் குறித்து அறிந்து கொண்டனர்.

முகாமில் நர்சிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துக்கண்ணு, பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரகாசம், துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் மதன்குமார் செய்திருந்தார்.

Tags

Next Story
ஆப்பிள் பிரியர்களுக்கான  புதிய  அறிமுகம்..! பழைய விலைக்கே அப்கிரேட்டட் மேக்புக் ஏர் எம்2, எம்3 மாடல்கள்..மிஸ் பண்ணிடாதீங்க!..