Xiaomi வெளியிட்ட புது AC + Heater மாடல்....! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...!
சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 HP: புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!
சியோமி நிறுவனம் புதிதாக சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி என்ற ஏசி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.
அறிமுகம் மற்றும் அடிப்படை அம்சங்கள்
சியோமி அதன் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பிரிவில் புதிதாக தொடர்ந்து பல ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது இந்த வரிசையில் நிறுவனம் சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி என்ற வால் மவுண்ட் ஏசி மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இரட்டை செயல்பாடு கொண்ட சாதனம்
இந்த ஏசியை நீங்கள் வெப்பமான நேரத்தில் குளிர்ந்த காற்றை பெறவும் பயன்படுத்தலாம் மற்றும் குளிர் காலத்தில் சூடான காற்றை பெறவும் பயன்படுத்தலாம். இது AC + Heater சாதனமாக செயல்படுகிறது.
மின்சார சேமிப்பு திறன்
சந்தையில் தற்போது கிடைக்கும் AC மாடல்களை விட இது மிகவும் குறைந்த அளவிலான மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. ஆண்டுக்கு சுமார் 361 kWh மின்சாரத்தை மிச்சம்பிடிக்கிறது.
வேக குளிரூட்டும் தொழில்நுட்பம்
Mi Ho (Rapid heating) அம்சத்துடன் வருகிறது. வெறும் 30 வினாடிகளில் முழுமையாக குளிர்விக்கிறது மற்றும் 60 வினாடிகளில் சூடாக்குகிறது. 18 டெசிபல் அளவிற்கும் குறைவான இரைச்சல்.
தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்
லிங்யுன் ஸ்மார்ட் கண்ட்ரோல் என்ஜின், கிளவுட் பேஸ் லேர்னிங் அல்கோரிதம், OTA அப்டேட்கள், 8 போல் 12 ஸ்லாட் கம்ப்ரெஸ்ஸர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
இந்தியாவில் விரைவில் கிடைக்கவுள்ள இந்த சாதனத்தின் அடிப்படை விலை ₹27,654 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu