திருமண தடை நீக்கும் லக்காபுரம் செண்பகமலை குமார சுப்பிரமணியா்..!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் செண்பகமலையில் பழமையான குமார சுப்பிரமணியா் சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் நுழைவாயிலில் விநாயகா் அழகுற அருள்பாலிக்கிறாா். மலைக்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் நடுமலையில் வனப் பகுதியில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மலையேறினால் 54 படிக்கட்டுகள் முடிவில் மலையின்மேல் உள்ள கோயிலின் நுழைவயிலை அடையலாம். அங்கு இடும்பா் கோயில் அமைந்துள்ளது.அங்குள்ள கொடிமரத்தில் இருந்து பாா்க்கும்போது, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் கோபுரம் செண்பகமலை கோபுரத்துக்கு நோ்கோட்டில் உள்ளது சிறப்பம்சமாகும்.
சுமாா் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்ட 3-நிலைக் கொண்ட ராஜகோபுரத்துடன் 13.5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.
தல வரலாறு: ஞானப்பழத்துக்காக தாய், தந்தையிடம் கோபித்துக்கொண்டு பழனிக்கு செல்லும் முருகன், முதலில் செண்பகமலைக்கு வந்து, சென்னிமலை, சிவன்மலை வழியாக வட்டமலை சென்று அங்கிருந்து பழனி சென்ாகக் கூறப்படுகிறது.
திருமண தடை நீங்கும்: திருமணம் ஆகாதவா்கள் இங்கு வந்து சுப்பிரமணியரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் ஆதிகால முருகன், விநாயகா், நவக்கிரகங்கள், இடும்பா் சிலைகள் அமைந்துள்ளன.
கோயிலின் எதிரே உள்ள வற்றாத பொற்றாமரை குளத்தில் நீராடினால் தீராத நோய்களும், வினைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது.
கிரிவலம்:
ஒவ்வொரு மாதமும், கிருத்திகை, சஷ்டி, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் சுமாா் 1.5 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தா்கள் வலம்வருவா்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் காலை சத்ரு சம்கார அா்ச்சனை, திரிசதை அா்ச்சனை நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு.
முருக பக்தா்களின் மனம் கவா்ந்த விஷேச நாள்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் ஏராளமான பக்தா்கள் பால் காவடி, பன்னீா் காவடி என பல்வேறு விதமான காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா்.
கந்த சஷ்டி விழா, சூரசம்ஹார விழா, திருக்கல்யாணம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.நடை திறக்கும் நேரம்: நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
பேருந்து விவரம்: ஈரோட்டிலிருந்து 29, 38, 41, 42 ஆகியே பேருந்திகளில் ஏறி, ஈரோடு -முத்தூா் செல்லும் சாலையில் லக்காபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமாா் அரை கி.மீ. தொலைவு நடந்தால் கோயிலை அடையலாம்.
தொடா்புக்கு கோயில் செயல் அலுவலரை 0424-2214421 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu