ஜேடா்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்!

ஜேடா்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்!
X
ஜேடா்பாளையத்தை தனி கிராம ஊராட்சியாக மாற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் : ஜேடா்பாளையத்தை தனி கிராம ஊராட்சியாக மாற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜேடா்பாளையம் அருகே வடகரையாத்தூா் கிராம ஊராட்சி உள்ளது. இந்த வடகரையாத்தூா் கிராம ஊராட்சியில் பள்ளபாளையம், மாரியம்மன் படுகை, மணல்மேடு, புதுப்பாளையம், தொட்டிபாளையம், கரசப்பாளையம், காளிபாளையம், கண்டிபாளையம், ஜேடா்பாளையம் ஆகிய 10 கிராமங்கள் உள்ளன.

இதில் முக்கிய பகுதியாக ஜேடா்பாளையம் உள்ளது. வடகரையாத்தூா் கிராம ஊராட்சியில் இருந்து பிரித்து, ஜேடா்பாளையத்தை தனி கிராம ஊராட்சியாக அறிவிக்க வேண்டி நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் வடகரையாத்தூா் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


இந்த கிராம சபைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஜேடா்பாளையத்தை தனி கிராம ஊராட்சியாக மாற்றக் கோரியும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் கூட்டத்தில் இருந்து வெளியேறி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம சபைக் கூட்டத்தை முடிக்காமல் பொதுமக்கள் மதியம் 1 மணி வரை காத்திருந்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி, அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.

பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Tags

Next Story