ஈரோடு மாவட்டத்தில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஈரோடு மாவட்டத்தில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களாக நியமனம் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 2023-24ம் கல்வி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலம் மற்றும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள 23 இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்ப தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள். இல்லையெனில், வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள். பட்டியலினத்தவர்கள் மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதி அல்லது அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்கண்ட ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம் என்ற விகிதங்களில் கல்வி ஆண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களை கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை ஊதியம் வழங்கப்படும்.
தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் காலிப்பணியிடத்திற்கு தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், ஐந்தாம் தளம், ஈரோடு 638011 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது dadwoerd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 10ம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 0424 2260455 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu