/* */

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் இதோ ! உங்களுக்காக..

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்.

ரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியருக்கான கல்வி தகுதித்தேர்வு தாள்-1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதித்தேர்வு தாள்-2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை ஆசிரியருக்கான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரம்:-












விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம் - deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் - deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.இவற்றை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலரிடம் நாளை (திங்கட்கிழமை) முதல் 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.இந்த நியமனமானது முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல் மற்றும் முறையான நியமனங்கள் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும். பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 July 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...