பச்சைமலை முருகன் கோவிலில் கூடுதல் நுழைவுக்கட்டணம்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள்!
![பச்சைமலை முருகன் கோவிலில் கூடுதல் நுழைவுக்கட்டணம்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள்! பச்சைமலை முருகன் கோவிலில் கூடுதல் நுழைவுக்கட்டணம்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள்!](https://www.nativenews.in/h-upload/2025/02/14/1977299-jhfhg.webp)
ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பைக் மற்றும் கார்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்பவர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டனம் வசூலிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவிலுக்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக 10 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும் வசூலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ஏலம் எடுத்துள்ளவர்கள் பைக்களுக்கு வழங்க வேண்டிய டோக்கனில் உள்ள கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகையை எவ்வித அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வரும் பக்தர்களிடம் வசூல் செய்வதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூடுதல் கட்டண வசூலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் மீது மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu