8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் 'ஹால் டிக்கெட்' வழங்கல்..!

8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் ஹால் டிக்கெட் வழங்கல்..!
X
8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் 'ஹால் டிக்கெட்' வழங்கல்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

நடப்பு ஆண்டு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வு வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்

என்.எம்.எம்.எஸ். தேர்வு மைய பொறுப்பாளர்கள் மாணவர்களின் பெயர் பட்டியலை பிப்ரவரி 17ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளி யூசர் ஐ.டி. மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த மாணவர்களுக்கு வழங்கி, தேர்வு மைய விபரங்களை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஹால் டிக்கெட்டில் திருத்தங்கள்

ஹால் டிக்கெட்டில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, வகுப்பினம் போன்றவற்றில் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதனை சிறப்பு நிற பேனாவைக் கொண்டு குறிப்பிட்டு தலைமை ஆசிரியரின் கையொப்பத்தை பெற்று மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

Tags

Next Story