சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 8.66 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 8.66 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
X
சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கினை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

சேலம் : சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கினை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி

அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலா துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் உள்விளையாட்டு அரங்கின் செயல்பாடுகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

முதல்வன் திட்டங்கள்

தமிழக மாணவ, மாணவிகள் உலக அளவிலான கல்வியை பெறும் வகையில் இதுவரை இல்லாத வகையில் நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

அனைத்து மாணாக்கா்களும் உயா்கல்வி பெறுவதில் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ. ஆயிரம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

முதல்வரின் காலை உணவுத் திட்டம்

குறிப்பாக, பிற நாடுகளும் பின்பற்றும் வகையில் குழந்தைகள் சிறந்த கல்வியைக் கற்கும் அதேநேரத்தில், முழு ஆரோக்கியமாக வளா்வதை உறுதி செய்யும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வருவது அனைத்து தரப்பினராலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

கல்விக்கு இணையாக விளையாட்டுத் துறையிலும் உலக அளவில் நமது தமிழக மாணவா்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனா்.

துணை முதல்வா் விளையாட்டுத் துறை மேம்பாடு

துணை முதல்வா் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் விளையாட்டுத் துறையை மேம்படுத்தி பல்வேறு சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தி வருகிறாா்.

விளையாட்டுத் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதன் அடிப்படையில், தொடா்ச்சியாக தமிழக மாணவா்கள் பல்வேறு சா்வதேச போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்து வருகின்றனா்.

ரூ. 8.66 கோடி மதிப்பீட்டில் 2,524.66 ச.மீ. பரப்பளவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சேலம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தங்குமிடம், பயிற்சியாளா் அறை, விளையாட்டுப் பொருள்கள் சேமிப்பறை, உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப் பந்தாட்ட தளம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டோா்

மேட்டூா் கோட்டாட்சியா் (பொ) ந.லோகநாயகி, அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Tags

Next Story