கோபி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது

கோபி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது
X
கோபி அருகே போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தெப்பக்குளம் பகுதியில் ரகசியமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்கள்

  • கேரபி புதுச்சாமிகோவில் வீதியைச் சேர்ந்த சூர்யாசாமி (21)
  • கலிங்கியம் அருகே உள்ள நாகர்பாளையம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த மோனீஸ் (21)
  • புதுப்பாளையம் சிவசண்முகம் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (24)

போலீசார் விசாரிக்கையில், அவர்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகள், ஒரு சிரஞ்சி 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story