/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேலான ஊராட்சிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 310 பேருக்கு பதிலாக 110 பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில்  10-க்கும் மேலான ஊராட்சிகளில்   தடுப்பூசி தட்டுப்பாடு
X

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் போதிய அளவிலான தடுப்பூசி இல்லாத காரணத்தினால் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1224 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், பொது மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, பொதுமக்கள் அதிகாலை முதல் தங்களது பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தனர். இருப்பினும் போதிய அளவிலான தடுப்பூசி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 310 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. ஆனால், 110 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதன் காரணமாக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Updated On: 12 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!