/* */

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு : 2 பேர் கைது

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு : 2 பேர் கைது
X

சிசி டிவி கேமராவில் பதிவான குழந்தை கடத்தல் காட்சி.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி மாலினி (19). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மாலினிக்கு 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் மாலினி இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார்.

கழிவறையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல்கட்டுபாட்டு அறையில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி அண்ணாதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கடத்திய பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டனா்.

இதனையடுத்து இன்று இண்டூா் காவல்துறையினா் சந்தேகத்தின் பெயாில் விசாரணை செய்ததில் தஞ்சனா கணவா் ஜான் பாஷா குழந்தையை கடத்தியது தொியவந்தது. அவா்களிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு தாய் மாலினியிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On: 22 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு