/* */

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்கும்

எஸ்ஆர்எம் பல்கலையில் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் தினத்தையொட்டி 146 ஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்கும்
X

இந்தோ அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் முனைவர் நந்தினி கண்ணன் கலந்துகொண்டுஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம்சான்றிதழ்கள் வழங்கினார்

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்குவதாக இந்தோ- அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் நந்தினி கண்ணன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் தினம் 2022 எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது

நிகழ்வுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக இந்தோ அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் முனைவர் நந்தினி கண்ணன் கலந்துகொண்டு146 ஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். மேலும் எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையதிற்கு சிறப்பு மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு அமைக்க அரசின் நிதி பெற காரணமாக விளங்கிய டாக்டர் சத்யஜித் மகோபத்ராவை பாராட்டி விருது வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் :அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்குகிறது. சர்வதேச அளவிலான ஆராய்ச்சி பணிகள் அதிலும் கூட்டு ஆராய்ச்சி பணிகள் புதுமை படைப்புகளுக்கு வழிவகுக்கும், எனவே மாணவர்களை சர்வதேச அளவிலான கூட்டு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். .நாட்டின் தேசிய கல்வி கொள்கை மூலமாக சர்வதேச அளவில் மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்கவும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் வழி வகுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எஸ். பொன்னுசுவாமி, தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் குணசேகரன் மற்றும் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள், டீன்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Updated On: 1 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்