/* */

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
X

புதிய பேருந்து நிலையத்தில் வைத்திருக்கக்கூடிய கடைக்காரர்கள் நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் தினந்தோறும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து சென்னை. தாம்பரம். மதுராந்தகம். மகாபலிபுரம். திருப்போரூர். உள்ளிட்ட தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக இப்பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும்.

இந்தநிலையில் புதிய பேருந்து நிலையத்தில் வைத்திருக்கக்கூடிய கடைக்காரர்கள் நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும் கேஸ் சிலிண்டர்களையும் வெளியில் வைத்து சமைப்பதால் எந்நேரமும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய வாய்புகள் உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள காரணமாக பயணிகள் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அங்கு சமைக்கக்கூடிய பாத்திரங்களில் இருந்து என்னை கீழே வடிவதால் அவ்வழியே செல்லும் பயணிகள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகின்றன. பயணிகள் கேட்பதால் அங்குள்ள கடைக்காரர்கள் ஒருமையில் பேசி பொதுமக்களை தாக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்களும் பயணிகளும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் புதிய பேருந்து நிலையத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  5. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு