/* */

திருவமாளவன் எம்.பி. துவக்கி வைத்த வருமுன்காப்போம் மருத்துவ முகாம்

திருமானூர் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை தொல்.திருமாவளவன் எம்.பி.துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவமாளவன் எம்.பி. துவக்கி வைத்த வருமுன்காப்போம் மருத்துவ முகாம்
X

அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ முகாமை தொல்.திருமாவளவன் எம் பி. துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகம் வழங்கினார்.


அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் இன்று துவக்கி வைத்தார்.

இம்முகாமில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துப்பெட்டகம், பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண்கண்ணாடி, இரத்ததான கொடையாளர்களுக்கு சான்றிதழ், தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கலைஞரின் வருமுன்காப்போம் திட்டம் ஒரு விழிப்புணர்வுக்கான இயக்கமாகும். இன்று ஒருநாள் மட்டும் இம்முகாமில் பொதுமக்கள் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக நடத்தப்படும் நிகழ்வு அல்ல. நோய் வருவதற்கு முன் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். ஒரு மனிதனுக்கு கிருமிகளால் தொற்று ஏற்படுகிறது. நோய் தொற்று ஏற்படுவதற்கு காரணமான கிருமிகள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆகவே, கிருமிகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஏற்படுவது தொற்று நோயாகும். குடிநீர் மூலமும், கைக்குலுக்குவதன் மூலமும் ஏற்படும் நோய் தொற்று நோயாகும். எனவே, இதுபோன்ற தொற்று நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக்கொள்வதற்கும் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சுகாதாரத்திருவிழா, கலைஞரின் வருமுன்காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. நோய் வந்தபிறகு மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வதை விட நோய் தொற்றாமல் முன் கூட்டியே கண்டறிந்தால் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழலாம். விபத்து நடக்காமல் கவனமாக இருப்பதைப்போல நோய் தொற்றாமல் இருக்கவும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு தேவை. பொதுமக்கள் தங்களை தூய்மையாக பராமரித்துக்கொள்ள வேண்டும். தினமும் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பணிநிமித்தமாக செல்வதால், தினமும் குளித்தல், துணி துவைத்தல், பல் துலக்குதல், உண்ணவேண்டிய உணவை தேர்வு செய்து உண்ணுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு கிருமி தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும்.

பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும்பொழுது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை முறையாக உண்ண வேண்டும். இதனை முறையாக கடைபிடிக்காவிட்டால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நோய் வரும் முன்பும், நோய் வந்த பின்பும் மருத்துவர் கூறும் அறிவுரைகளை தவறாது சரியான கால அளவுகளில் பின்பற்ற வேண்டும். இதனால் நோய் வந்த பின்பும் நம்மை தற்காத்தக்கொள்ளலாம். எனினும் நோய் வராமல் தடுக்கவே கலைஞரின் வருமுன்காப்போம் திட்டமாகும். பொதுமக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ உடற்பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் முக்கியமாகும். நல்ல சீரான இரத்த ஓட்டத்திற்கு நடைபயிற்சி அவசியமாகும். எனவே, தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடத்திற்கு குறையாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வராமல் தடுத்தல் மற்றும் நோய் வந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் மற்றும் உணவு முறைகள் குறித்தும் இதன் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும், தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் இக்கையேடுகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற விழிப்புணர்வு முகாமை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றார்.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், செயற்பொறியாளர் இராஜராஜன், திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர் சுமதிஅசோகசக்கரவர்த்தி, பொது சுகாதாரத்துணை இயக்குநர் கீதாராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கீதாஜெயவேல், ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மேகநாதன், தமிழ்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2022 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...