/* */

ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு சீல்

அரியலூர் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

HIGHLIGHTS

கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பால், மளிகை பொருட்கள்,இறைச்சி, மீன் கடைகளை 12 மணிவரை திறக்கலாம் என்றும் மற்ற அனைத்து கடைகளுக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அரியலூர் நகரில் அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் இன்று கடை வீதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அத்தியாவசிய தேவையின்றி திறக்கபட்ட பேன்ஸி ஸ்டோர், பர்னிச்சர் கடை, செருப்பு கடை, டயர் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 6 கடைகளுக்கு சீல் வைத்தும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கபட்டது.

மேலும் விதிகளை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இதில் நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 May 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  3. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  4. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  8. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  9. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...