/* */

அரியலூர் நகராட்சியில் எம்எல்ஏ தனது வாக்கைப்பதிவு செய்தார்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 14வது வார்டு வாக்குச்சாவடியில் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா தனது வாக்கினை பதிவு செய்தார்

HIGHLIGHTS

அரியலூர்  நகராட்சியில்  எம்எல்ஏ  தனது வாக்கைப்பதிவு செய்தார்
X

அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா தனது வாக்கினை பதிவு செய்தார்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் காலை 11 மணிவரை 30.79 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சிக்கு 34 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு 38 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7மணியில் இருந்து மாலை 6வரை நடைபெறும் 101 வாக்குச்சாவடிகளுக்கும் போலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பதற்றம் நிறைந்த 17வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு மற்றும் வெப்கேமரா பதிவு ஆகியவற்றை கொண்டு கண்காணிப்பு நடைபெறுகிறது.காலை 7மணிமுதல் 11மணிவரை அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்தமாக 30.79 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 11724 ஆண்வாக்காளர்கள் மற்றும் 12794 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 24518 வாக்காளர்களில், 3531 ஆண் வாக்காளர்கள் மற்றும் 3259 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6790 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 27.69 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28042 வாக்காளர்களில், 4308 ஆண் வாக்காளர்கள் மற்றும் 3898 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8206 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 29.26 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 4676 ஆண்வாக்காளர்கள் மற்றும் 4770 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9446 வாக்காளர்களில், 1767 ஆண் வாக்காளர்கள் மற்றும் 1713 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3480 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 36.84 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3499 ஆண்வாக்காளர்கள் மற்றும் 3704 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7203 வாக்காளர்களில், 1404 ஆண் வாக்காளர்கள் மற்றும் 1426 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2830 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 39.29 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 4இடங்களில் உள்ள 33401 ஆண்வாக்காளர்கள் மற்றும் 35808 பெண் வாக்காளர்களில் என மொத்தம் 69209 வாக்காளர்களில், 11010 ஆண் வாக்காளர்கள் மற்றும் 10296 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 21306 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 30.79 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 14வது வார்டு வாக்குச்சாவடியில் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அமைதியான முறையில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Updated On: 19 Feb 2022 8:15 AM GMT

Related News