/* */

100 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

தடுப்பூசி செலுத்திய மருத்துவப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

HIGHLIGHTS

100 சதவீதம் கர்ப்பிணி  தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
X

தடுப்பூசி செலுத்திய மருத்துவப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டதில் 100 சதவீதம் கர்ப்பி த்தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை 100 சதவீதம் செயல்படுத்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கும், மேலும் 100 சதவீதம் கர்ப்பணித்தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவப்பணியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டமானது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக மருத்துவப்பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று, ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களின் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளிகளுக்கு தேவைப்படும் பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடுகூர் வட்டாரத்தில் உள்ள 17 துணை சுகாதாரநிலையங்கள் மூலம் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,747 நபர்களுக்கு இரத்த கொதிப்பு, 1375 நபர்களுக்கு நீரிழிவு நோய், 758 நபர்களுக்கு இரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் என மொத்தம் 3,880 நோயாளிகளுக்கு இரத்த கொதிப்பு மற்றும் நீரிழவு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, களப்பணியாளர்கள் மூலமாக இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் இயன்முறை சிகிச்சையில் 144 நபர்களும், ஆதரவு சிகிச்சையில் 127 நபர்களும் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் முதன் முதலாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 125 துணை சுகாதார மையங்கள், 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 வட்டார அளவிலான சமுதாய சுகாதார நிலையங்கள், 2 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கள அளவிலான மருத்துவ முகாம்கள் வாயிலாக வீடு, வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து, 20 மருத்துவக்குழுக்கள் அமைத்து, 7,187 கர்ப்பணித்தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை பதிவு செய்யப்பட்ட மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள 100 சதவீத 7,187 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலனிற்காக மருத்துவத்துறையில் செயல்படுத்தும் அத்துனை திட்டங்களும் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் முனைப்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர் களுக்கும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துகொள்வதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, மற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Aug 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!